Akshaya Tritiya 2025: 2025ஆம் ஆண்டில் அக்ஷய திருதியை எந்தத் தினத்தில் வருகிறது தெரியுமா? நல்ல நேரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இங்குள்ளன.
Akshaya Tritiya 2025: 2025ஆம் ஆண்டில் அக்ஷய திருதியை எந்தத் தினத்தில் வருகிறது தெரியுமா? நல்ல நேரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இங்குள்ளன.
Published on: April 19, 2025 at 8:39 am
இந்துக்களின் மிக புனிதமான பண்டிகைகளில் அக்ஷயை திருதியையும் ஒன்றாக உள்ளது. இந்தப் பண்டிகை செழிப்பு மற்றும் வளர்ச்சியை குறிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2025) அக்ஷய திருதியை பண்டிகை ஏப்.30ஆம் தேதி வருகிறது.
அக்ஷய திருதியை நேரம்
அக்ஷய திருதியை 2025 ஏப்.29 மாலை 5.31 மணிக்கு தொடங்குகிறது. அதன்படி, 2025 ஏப்.30ஆம் தேதி மதியம் 2.12 மணி வரை இருக்கிறது.
அக்ஷய திருதியை பூஜை முகூர்த்தம்
அக்ஷய திருதியை பூஜை முகூர்த்தம் 2025 ஏப்.30ஆம் தேதி காலை 5.40 மணிக்கு தொடங்கி மதியம் 12.18 வரை இருக்கும்.
இதையும் படிங்க : துரியோதனன் மனதில் இருந்த 3 கேள்விகள்; கிருஷ்ணர் கொடுத்த பதில்!
அக்ஷய திருதியை பூஜை செய்வது எப்படி?
அக்ஷயை திருதியை நன்நாளில் புனித நதிகளில் அதிகாலை குளித்து, விஷ்ணு, லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு துளசி, சந்தனம், நெய் மற்றும் இனிப்பு படைத்து பூஜிக்கலாம். அப்போது, விஷ்ணு சகஸ்கர மந்திரம் மற்றும் விநாயகர் மற்றும் லட்சுமி மந்திரங்களை ஜெபிக்கலாம். அக்ஷயை திருதியை நன்நாளில் பறவைகள், விலங்குகள், எறும்புகள் மற்றும் ஏழை பிராமணர்களுக்கு உணவளிக்கலாம். அக்ஷயை திருதியை நன்நாளில் பணம், வெள்ளி, தங்கம் உள்ளிட்ட பொருள்களை பரிசாக அளிக்கலாம். அக்ஷயை திருதியை நன்நாளில் தங்கம், வெள்ளி மற்றும் உப்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருள்கள் வாங்குவது இயல்பானது ஆகும்.
அக்ஷய திருதியை
அக்ஷயம் என்பது “நித்தியமானது” அல்லது ஒருபோதும் குறையாது என்பதைக் குறிக்கிறது, அதே நேரத்தில் “திரிதியா” என்பது சந்திர சுழற்சியின் மூன்றாவது நாளைக் குறிக்கிறது. இந்த நாளில் தொடங்கப்படும் எந்தவொரு முயற்சியும் செழித்து வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், புதிய தொடக்கங்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுகிறது.
தங்கம் வாங்க உகந்த நேரம்
அக்ஷயை திருதியை நன்நாளில் 2025 ஏப்.30 மாலை 05:31 மணி முதல் காலை 05:48 மணி வரை தங்கம் வாங்க உகந்த நேரம் ஆகும்.
இதையும் படிங்க : மயானத்தில் கடும் தவம்; சுழட்டி அடித்த பேய்கள்: நேரில் காட்சிக் கொடுத்த முருகன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com