யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஐ.எஃப்.எஸ். மெயின்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு இன்று (நவம்பர் 14 ) வெளியாகி உள்ளது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஐ.எஃப்.எஸ். மெயின்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு இன்று (நவம்பர் 14 ) வெளியாகி உள்ளது.
Published on: November 14, 2024 at 4:05 pm
UPSC IFS Mains 2024 | யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) இந்திய வன சேவை (IFS) 2024 முதன்மை தேர்வுக்கான அட்மிட் கார்டை இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி அட்டைகளை அதிகாரப்பூர்வ யு.பி.எஸ்.சி. இணையதளமான upsc.gov.in அல்லது upsconline.nic இலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அட்மிட் கார்டுகளை பதிவிறக்கம் செய்ய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி போன்ற போன்றவை தேவைப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களின் இ-அட்மிட் கார்டுகள் கிடைத்தவுடன் அவற்றை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஹால் டிக்கெட்டுகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
தேர்வு முறை
யு.பி.எஸ்.சி. ஐ.எஃப்.எஸ். மெயின்ஸ் 2024 தேர்வு நவம்பர் 24 முதல் நடைபெறும். தேர்வு மூன்று மணிநேரம் நடைபெறும் மற்றும் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். காலை அமர்வு காலை 9 மணி முதல் மதியம் வரை மற்றும் பிற்பகல் அமர்வு மதியம் 2:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும். ஒவ்வொரு அமர்வுக்கும் 30 நிமிடங்களுக்கு முன்பு தேர்வு நடைபெறும் இடத்திற்கான அனுமதி முடிவடையும் என்றும், நுழைவு நேரத்திற்கு பிறகு எந்த விண்ணப்பதாரரும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய வன சேவை (IFS) தேர்வு செயல்முறை 2024 மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. முதல்நிலை, மெயின்ஸ் மற்றும் நேர்காணல். மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க டிகிரி தகுதி; ஐ.டி.பி.ஐ. வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com