SBI SO Notification 2024 |
எஸ்.பி.ஐ சிறப்பு அதிகாரி பணிக்கு 58 பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க செப்.24 கடைசி தேதி ஆகும்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
SBI SO Notification 2024 |
எஸ்.பி.ஐ சிறப்பு அதிகாரி பணிக்கு 58 பணி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க செப்.24 கடைசி தேதி ஆகும்.
Published on: September 13, 2024 at 2:04 pm
SBI SO Notification 2024 | எஸ்பிஐ- யில் 54 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் தேர்வு பல்வேறு துறைகளில் துணைத் தலைவர், உதவித் துணைத் தலைவர் மற்றும் மூத்த சிறப்பு நிர்வாகி போன்ற பல்வேறு பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 3 முதல் இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 24 வரை ஆகும்.
கல்வித் தகுதி
பொறியியல் துறை, மற்றும் பி.சி.ஏ, பி.பி.ஏ, எம்.சி.ஏ, எம்டெக், எம்.எஸ்.சி உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பதவியை பொருத்து கல்வித்தகுதி மாறுபடும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
27 வயது முதல் 48 வயது வரை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பதவியைப் பொருத்து வயது வரம்பு மாறுபடும்.
விண்ணப்பக் கட்டணம்
ஜெனரல், மற்றும் பொதுப்பிரிவினர் ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்,டி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை
தகுதியானவர்கள் ஸார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்.தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும். காலியிடங்கள், விண்ணப்பதாரரின் கல்வித் தகுதிகள், தேர்வு செயல்முறை, தேர்வு முறை, முன் அனுபவம், சம்பளம் மற்றும் பிற விவரங்களுக்கு எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ போர்ட்டல் sbi.co.in-ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும்ப படிங்க : இந்தியா எக்ஸிம் வங்கியில் வேலை; டிகிரி தகுதி: உடனே செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com