Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
Keir Starmer: இந்தியாவில் மேலும் இரண்டு பிரிட்டிஷ் பல்கலைக்கழக வளாகங்களை அமைக்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
Published on: October 10, 2025 at 10:35 am
மும்பை, அக்.10, 2025: இங்கிலாந்து பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வியாழக்கிழமை (அக்.9, 2025) அறிவித்தார்.
அதாவது, இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், லான்காஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் சர்ரே பல்கலைக்கழகம் ஆகியவை இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க ஒப்புதல் பெற்றுள்ளதாகக் கூறினார்.
இங்கிலாந்தின் முக்கிய வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்கள் 125 பேர் கொண்ட குழுவுடன் பிரிட்டிஷ் பிரதமர் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை (அக்.8, 2025) காலை மும்பை வந்தடைந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் டெல்லியில் ஒரு வளாகத்தைத் திறந்தது, அதே நேரத்தில் யார்க் பல்கலைக்கழகம், அபெர்டீன் பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம், குயின்ஸ் பல்கலைக்கழகம் பெல்ஃபாஸ்ட் மற்றும் கோவென்ட்ரி பல்கலைக்கழகம் ஆகியவை அடுத்த ஆண்டு முதல் வளாகங்களைத் திறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : யு.ஜி.சி பட்டியலிட்ட 54 ‘டிபால்ட்’ பல்கலைக் கழகங்கள்.. மத்தியப் பிரதேசம் முதலிடம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com