Delhi University Admissions: 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் காலியாக உள்ள இளங்கலை (UG) இடங்களை நிரப்ப டெல்லி பல்கலைக்கழகம் மும்முரமாகியுள்ளது.
Delhi University Admissions: 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் காலியாக உள்ள இளங்கலை (UG) இடங்களை நிரப்ப டெல்லி பல்கலைக்கழகம் மும்முரமாகியுள்ளது.
Published on: September 17, 2025 at 1:46 pm
புதுடெல்லி, செப்.17, 2025: மாப்-அப் சுற்று 1 க்குப் பிறகும் காலியாக உள்ள இளங்கலை இடங்களுக்கான மாணாக்கர்கள் சேர்க்கை சுற்றை டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த சுற்று நேரடி முறையில் நடைபெறும். இந்தச் சுற்றில் சேர்க்கை CUET மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான தேர்வுகளின் அடிப்படையில் இருக்கும்.
அதாவது, பல்கலைக்கழகத்தின் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டம் சார்ந்த தகுதி விதிகளையும் மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த மாப்-அப் சுற்றுக்கான பதிவு செப்டம்பர் 17, 2025 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 19, 2025 அன்று இரவு 11:59 மணிக்கு முடிவடையும்.
இதையும் படிங்க :2023 நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற அனுஷ்கா குல்கர்னி; சாதித்தது எப்படி
இதில், கல்லூரிகள் மற்றும் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களின் விவரங்கள் சேர்க்கை இணையதளமான admission.uod.ac.in இல் கிடைக்கும். ஒதுக்கீடு மற்றும் சேர்க்கை செயல்முறை செப்டம்பர் 23, 2025 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட மாணாக்கர்களுக்கு அறிக்கையிடும் தேதி, நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்களுடன் மின்னஞ்சல் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். சேர்க்கை நேரடியாக மட்டுமே நடைபெறும், மேலும் மாணவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சீட் ஒதுக்கீட்டின் போது உடனடியாக ஆன்லைனில் சேர்க்கை கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தப்படாவிட்டால், சீட் ரத்து செய்யப்பட்டு வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :வங்கதேச மாணவர்கள் 5 பேர் சஸ்பெண்ட்.. பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com