CBCSE | UPSC | 22 வயதில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பலரும் உத்வேகமாக திகழ்கிறார் ரித்திகா ஜிண்டால்.
CBCSE | UPSC | 22 வயதில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பலரும் உத்வேகமாக திகழ்கிறார் ரித்திகா ஜிண்டால்.
Published on: September 16, 2024 at 7:49 pm
CBCSE | UPSC | 22 வயதில் ஐ.ஏ.எஸ் ஆகி சாதித்துள்ளார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரித்திகா ஜிண்டால்.
நம்மால் முடியுமா என ஏங்கித் தவிக்கும் மக்களுக்கு மத்தியில் வறுமையை கல்வியால் வென்று வெற்றிக்கு வறுமை தடை இல்லை என பலரும் நிரூபித்துக் கொண்டேதான் இருந்தார். அப்படி ஓர் உத்வேகம்தான் ரித்திகா ஜிண்டால். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், 12ஆம் வகுப்பு வரை தனது கல்வியை சி.பி.எஸ்.இ-யிலும், கல்லூரியை ஸ்ரீராம் வணிக கல்லூரியிலும் முடித்தவர் ஆவார்.
இவரன் தந்தை தீவிர வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். மறுபுறம் ரித்திகா தனது படிப்பை விடாது தொடர்ந்தார். இந்நிலையில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதிய இவர் முதல் தேர்வில் தோல்வியுற்றார். அடுத்த தேர்வில் நாட்டிலேயே 88வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். அதற்குள் நோய்வாய்பட்ட அவரின் தாய்-தந்தையை இழந்துவிட்டார்.
ஆயிரம் துன்பங்கள் தொடர்ந்த போதிலும் அதனை எதிர்த்து வென்றவர் ரித்திகா. பேட்டி ஒன்றில் ரித்திகா, “என் தந்தை உயிருக்கு போராடுவதைப் பார்ப்பேன். அவரின் போராட்டம் எனக்கு பலத்தை கொடுக்கும். அவரை எண்ணிப் பார்த்து தேர்வுக்காக கடுமையாக உழைத்தேன்” என்றார்.
இதையும்ப படிங்க : டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு; சென்னையில் மட்டும் 25 ஆயிரம் பேர் ஆப்சென்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com