Vairamuthu: இஸ்ரேல்- பாலஸ்தீன போர் முடிவுக்கு வருவதாய் தோன்றுகிறது என பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை எழுதியுள்ளார்.
Vairamuthu: இஸ்ரேல்- பாலஸ்தீன போர் முடிவுக்கு வருவதாய் தோன்றுகிறது என பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை எழுதியுள்ளார்.
Published on: October 5, 2025 at 3:00 pm
சென்னை, அக்.5, 2025: தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து, “இஸ்ரேல்-பாலஸ்தீன போர் முடிவுக்கு வருவதாய் தெரிகிறது” என உருக்கமான கவிதை ஒன்றை படைத்துள்ளார்.
அதில்,
“67 ஆயிரம் உயிர்களைக்
காவுகொண்ட பின்
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம்
முடிவுக்கு வருவதாய்த்
தோன்றுகிறது
பாலஸ்தீனத்திற்கே
கூடுதல் இழப்புகள் என்பதால்
இஸ்ரேலின்
விட்டுக்கொடுத்தல்களை
உலகம் வேண்டுகிறது
காசாவின் பிணைக் கைதிகளும்
இஸ்ரேலின் சிறைக் கைதிகளும்
காதலர்கள் பூக்களைப்
பரிமாறிக்கொள்வதைப் போல
மரியாதையாக விடுவிக்கப்பட வேண்டும்
இதையும் படிங்க : பாஸ்போர்ட் உடன் இன்ஸ்டா ஸ்டோரி.. யார் இந்த நடிகை ரேகா? சுஷாந்த் சிங் உடன் என்ன தொடர்பு?
முதலில் பாலஸ்தீனத்திற்கு
உணவுப் பாதையைத்
திறந்துவிடுங்கள்
எலும்புக் கூடுகளுக்குள்
உயிர் ஊறட்டும்
கூடாரங்கள் மெல்ல மெல்லக்
குடில்களாகட்டும்
போர் விமானங்கள்
பறந்த வானில்
புறாக்கள் பறக்கட்டும்
சமாதானத்தை முன்னெடுத்த
அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஏற்றுக்கொண்ட
இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு
இருவருக்கும்
இந்திய ரோஜாக்கள் பரிசளிக்கிறோம்
உலக நாடுகள் பல
ஒப்புக்கொண்ட வண்ணம்
பாலஸ்தீனம் தனி நாடாகட்டும்
“வெள்ளைப் பூக்கள்
உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி
அமைதிக்காக விடிகவே” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காந்தாரா புதிய உலகம்.. 3ம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்.. நடிகர் ஸ்ரீமான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com