Disha Patani: பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Disha Patani: பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Published on: September 18, 2025 at 9:59 am
Updated on: September 18, 2025 at 10:43 am
பரேலி (உ.பி), செப்.18, 2025: பாலிவுட் நடிகை திஷா பதானியின் பரேலி வீட்டில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் (நேற்று) புதன்கிழமை காசியாபாத்தில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், ரவீந்திர மற்றும் அருண் என அடையாளம் காணப்பட்ட இருவரும் கோல்டி பிரார் மற்றும் ரோஹித் கோதாரா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று உத்தரப் பிரதேச சிறப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், “போலீசாருடனான மோதலில் காயமடைந்த குற்றவாளிகள் (ரவிந்தா என்கிற குலு மற்றும் அருண்) இருவரும் உயிரிழந்தனர்” எனவும் போலீசார் தெரிவித்தனர்.
Firing outside actor Disha Patani's father Jagdish Patani's residence | Uttar Pradesh STF arrests two accused, identified as Ravinda alias Kullu and Arun, following an encounter. Both accused were injured in the encounter that happened in Ghaziabad. STF says that both accused…
— ANI (@ANI) September 17, 2025
பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின்படி கூற்றுப்படி, நொய்டா பிரிவின் சிறப்புப் படையினரும் டெல்லி காவல்துறையினரும் இணைந்து காசியாபாத்தின் ட்ரோனிகா நகரில் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். இந்நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பியோட முயற்சித்த போது துப்பாக்கிச் சூடு நடந்தது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திஷா பதானி வீட்டில் என்ன நடந்தது?
முன்னதாக, செப்டம்பர் 12 ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில், பரேலியில் உள்ள திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு, கோல்டி பிராரின் கூட்டாளிகள் பொறுப்பேற்றதாகக் சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தச் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதையும் படிங்க : திரைத்துறையில் 20 ஆண்டுகள்.. மனம் திறந்த தமன்னா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com