Nitin Chauhan | 35 வயதில் பிரபல டி.வி. நடிகர் நிதின் மரணம் அடைந்தார்.
Nitin Chauhan | 35 வயதில் பிரபல டி.வி. நடிகர் நிதின் மரணம் அடைந்தார்.
Published on: November 8, 2024 at 10:33 pm
Nitin Chauhan | நிதின் சவுகான் மும்பை குடியிருப்பில் இறந்து கிடந்தார். 35 வயதான நடிகர், ரியாலிட்டி ஷோ தாதாகிரி சீசன் 2 இல் வெற்றி பெற்றவர் ஆவார். எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா மற்றும் கிரைம் பேட்ரோலில் நடித்து புகழ்பெற்று விளங்கினார்.
நிதினின் மரணம் குறித்த விவரங்கள் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை. விபூதி தாக்கூர் நிதினுடன் ஒரு கருப்பு வெள்ளை படத்தைப் பகிர்ந்துகொண்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், “அமைதியாக ஓய்வெடுங்கள் அன்பே. உண்மையிலேயே அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.
எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் வலிமை உங்களுக்கு இருந்திருக்க வேண்டுகிறேன்… உங்கள் உடலைப் போல மனதளவில் வலுவாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நடிகர் சுதீப் சாஹிரும் தனது இன்ஸ்டாகிராமில், அமைதியாக இருங்கள் நண்பரே (இதயத்தை உடைக்கும் ஈமோஜி)” என்று பதிவிட்டுள்ளார். 2022ல் இந்த நிகழ்ச்சியில்தான் நிதின் கடைசியாக டிவியில் தோன்றினார்.
யார் இந்த நிதின்?
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் நிதின். 2009 இல் பிண்டாஸ் சேனல் ரியாலிட்டி ஷோ தாதாகிரி 2 இல் வெற்றி பெற்றார். நிதின் எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் ஜிந்தகி டாட் காம் மற்றும் க்ரைம் பேட்ரோல் போன்ற மற்ற நிகழ்ச்சிகளிலும் நடித்தார்.
தற்கொலையா?
நிதின் சௌகான் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றும் தற்கொலையாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com