நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நாளை தளபதி படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நாளை தளபதி படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Published on: December 11, 2024 at 5:28 pm
Thalapathy Movie Re-Release | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நாளை (டிசம்பர் 12) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையிலும், அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையிலும், அவர் நடித்த “தளபதி” திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.
1991ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, சோபனா நடிப்பில் வெளியான தளபதி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. படம் வெளியாகி 33 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், தற்போது ரஜினி பிறந்தநாளுக்கு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
எஸ்எஸ்ஐ புரொடக்சன்ஸ் நிறுவனம் நாளை (12.12.2024) தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ரீ-ரிலீஸ் செய்கிறது. அதுமட்டுமின்றி, ரஜினிகாந்த் பிறந்த நாளான நாளை(12.12.2024) அவர் நடிப்பில் அடுத்து வரவுள்ள ‘ஜெயிலர் 2’,கூலி படத்தின் அப்டேட்டுகள் வெளியாகவுள்ளன.
இதையும் படிங்க ‘முதல் மரியாதை’ படத்தில் நடிக்க இருந்த ஹீரோ.. யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com