Dimple Hayathi: தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் விக்டர் டேவிட் ஆகியோர் வீட்டு பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Dimple Hayathi: தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் விக்டர் டேவிட் ஆகியோர் வீட்டு பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: October 1, 2025 at 3:58 pm
ஹைதராபாத், அக்.1? 2025: தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாத்தி மற்றும் அவரது கணவர் விக்டர் டேவிட் ஆகியோர் மீது, வீட்டு பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்கள் மீது ஹைதராபாத்தில் உள்ள பிலிம்நகர் காவல் நிலையத்தில், வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்தாரரான பிரியங்கா பிபர் (22), ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். செப்டம்பர் 22 ஆம் தேதி வேலை தேடி ஹைதராபாத் வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் அதே நாளில், ஷைக்பேட்டையில் உள்ள வம்சிராமின் வெஸ்ட்வுட் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டிம்பிள் மற்றும் டேவிட் வீட்டில் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா தனது புகாரில், தான் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாகவும், வாய்மொழியாக திட்டப்பட்டதாகவும், தனக்கு சரியான உணவு மறுக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :புக்கிங்கில் காந்தாரா சாப்டர் 1 சாதனை.. படத்தின் வெளியீடு எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com