Parasakthi: பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Parasakthi: பராசக்தி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Published on: January 13, 2026 at 9:54 pm
Updated on: January 13, 2026 at 9:55 pm
சென்னை, ஜன.13, 2026: சமீபத்தில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கோரியுள்ளது.
1960களின் மாணவர் புரட்சி மற்றும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 25 காட்சிகள் சென்சார் வாரியத்தால் நீக்கப்பட்ட நிலையில், சில காட்சிகள் கற்பனையாகக் குறிக்கப்பட்டுள்ளன.
முக்கிய எதிர்ப்புகளில், 1965ஆம் ஆண்டின் மொழி சர்ச்சை குறித்த காட்சியை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாஸ்கர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து பாஸ்கர், “1965இல் காங்கிரஸ் அரசு, தபால் அலுவலக படிவங்கள் அனைத்தும் ஹிந்தியில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என அறிவித்ததே இல்லை. இது எங்கள் கட்சியை அவமதிக்க உருவாக்கப்பட்ட கற்பனை” என அவர் கூறினார்.
மேலும், படத்தில் சிவகார்த்திகேயன் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த காட்சிகள் இந்திரா காந்தியை எதிர்மறையாக காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“இந்திரா காந்தி பிப்ரவரி 12ஆம் தேதி கோயம்புத்தூருக்கு வரவில்லை. அந்த சந்திப்பு நடந்ததே இல்லை. அந்த நாளில் அவர் கோயம்புத்தூரில் இல்லை” என பாஸ்கர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயின் ஜனநாயகன் படத்துக்கு என்ன பிரச்னை? உச்ச நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மேல்முறையீடு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com