விழுந்து விழுந்து சிரித்த சல்மான்கான்; ஹிந்தி பிக் பாஸில் தமிழ் பெண்: யார் இவர்?

Actress shrutika in hindi bigboss | தனது வெகுளித்தனமான பேச்சின் மூலம் இந்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதிகா.

Published on: October 13, 2024 at 9:46 pm

Actress shrutika in hindi bigboss | தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு “குக் வித் கோமாளி“ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் ஸ்ருதிகா. தனது எதார்தமான பேச்சு மற்றும் சுறுசுறுப்பான செயல்களின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். அவ்வப்போது ரீல்ஸ் மற்றும் பேட்டிகளாலும் டிரெண்டாகி விடுவார் ஸ்ருதிகா.

இந்நிலையில், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. ஆனால், பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார் ஸ்ருதிகா. ஒவ்வொரு சீசனின் ஆரம்பத்திலும், புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் மேடையில் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.

அப்போது, சல்மான் ஸ்ருதியைப் பற்றி கேட்டபோது, “நான் ஹீரோயினாக நடித்த 4 படங்களும் மோசமான தோல்வியாயின,” என்று கிண்டலாகச் சொல்லி, அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டார். இதைக் கேட்டு நிகழ்ச்சி தொகுப்பாளரான சல்மான்கானும் சிரித்துவிட்டார். இந்த வீடியோ தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமாகி விட்டது. மேலும், ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில், சும்மா என்று தமிழ் வார்த்தையை பயன்படுத்திவிட்டார் ஸ்ருதிகா.

அதற்கு பிக்பாஸ் அர்த்தம் கேட்டார். அதற்கு ஸ்ருதிகா அளித்த வெகுளித்தனமான பதில் அனைவரையும் கவர்ந்தது. தன்னுடன் கலந்து கொண்டுள்ள சக இந்தி போட்டியாளர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் “ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி “ டயலாக்கை சொல்லிக்கொடுப்பது என தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஸ்ருதிகா. அவரது ரசிகர்களும் இந்தி தெரியாமலேயே இந்தி பிக்பாஸ் பக்கம் திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க: கணவனை கொலை செய்த மனைவி; அவள் அப்படித்தான்: விறுவிறுப்பான தொடர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com