Kudumbasthan | பரபரப்பான வாழ்க்கை, ஓடும் மணிகண்டன்: குடும்பஸ்தன் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட சிம்பு!
Kudumbasthan | பரபரப்பான வாழ்க்கை, ஓடும் மணிகண்டன்: குடும்பஸ்தன் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட சிம்பு!
Published on: September 28, 2024 at 9:25 pm
Kudumbasthan | மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள படம் குடும்பஸ்தன். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் சிம்பு வெளியிட்டார். நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. குடும்பஸ்தன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் சமூக வலைதளங்களில் இன்று (செப்.28, 2024) வெளியிட்டார்.
Elated to launch the interesting first look poster of #Kudumbasthan. Another entertaining film on the way from @manikabali87, best wishes to the entire team 🤗@Cinemakaaranoff @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @prasannaba80053 @VaisaghOfficial… pic.twitter.com/QrETzZoCHS
— Silambarasan TR (@SilambarasanTR_) September 28, 2024
இப்படத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். இந்தப் போஸ்டரில் மணிகண்டன் அவசரத்தில் இருப்பது போல் தோன்றினாலும், மற்ற மணிகண்டன்கள் விரக்தியிலும், கவலையிலும், சோர்விலும், பயத்திலும் உள்ளனர் என்பது போல் உள்ளது. இந்தப் படத்துக்கு வைசாக் இசையமைக்க, கண்ணன் பாலு படத்தொகுப்பாளராக பணியாற்றுகின்றனர்.
சுஜித் என் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தை எஸ் வினோத் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது குடும்ப படம் போன்று தோன்றுகிறது. மணிகண்டன் கடைசியாக லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க : நலம் தரும் நவராத்திரி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com