Ravana mavanda song release: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவரின் கடைசி படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது.
Ravana mavanda song release: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவரின் கடைசி படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது.

Published on: January 2, 2026 at 8:21 pm
Updated on: January 2, 2026 at 8:22 pm
சென்னை, ஜன 2, 2025; நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்; இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.
இதற்கு ஏற்றார் போல் அவரது ரசிகர்களையும் அவர் தயார் படுத்தி வருகிறார்; நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பிரதான கட்சிகளை கலங்கடித்து வருகிறது.
நடிகர் விஜய்யின் கட்சியை பாரம்பரிய பின்னணி கொண்ட கட்சிகள் கூட எதிர்த்து வருகின்றன. திமுக மற்றும் அதிமுக கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கூட நடிகர் விஜய்க்கு எதிராக பேசியுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் அரசியல் அனல் பறக்கும் சில வசனங்களும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மலேசியாவில் மிகப்பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் மிகப்பெரிய அளவில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜயின் ஜனநாயகம் திரைப்படத்திலிருந்து ராவண மவன்டா….. என்ற திரைப்பட பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது; இதேபோல் நடிகர் சிவா கார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது. இதனால் இரு திரைப்படங்களும் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஹேப்பி நியூ ஈயர் 2026: விஜய் தேவரகொண்டாவை கட்டியணைத்த ராஷ்மிகா மந்தனா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com