ஜெய் பீம் வெற்றி பட இயக்குனர் ஞானவேல் டைரக்ஷனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இந்தப் படம் மிகப்பெரிய தொகைக்கு விலை போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.வேட்டையன் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராணா வில்லனாகவும், மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதற்கிடையில் படத்தின் உரிமையை பெற தெலுங்கு மற்றும் மலையாள விநியோகஸ்தர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டைப் போல் ஆந்திராவிலும் வேட்டையன் பெரும் தொகைக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரஜினிகாந்தின் வேட்டையன் படப்பிடிப்பு திருநெல்வேலி, பணகுடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் அருகில் உள்ள காடுகளில் நடந்தது. இதனால் இது உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் கூறப்படுகிறது. செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)