Rachitha Mahalakshmi | 2007ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான மேகா மண்டலா என்ற சின்னத்திரை தொடரின் மூலமாக அறிமுகமானவர் ரச்சித்தா மகாலட்சுமி.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் ரச்சித்தா மகாலட்சுமி 2011ல் அறிமுகமானார். இதில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மலையாளத்தில் அவகாஷிகள் என்ற தொடரில் 2013ல் அறிமுகமானார். இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கை பொறுத்தமட்டில் ஈடிவியில் ஒளிபரப்பான ஸ்வாதி சினுகுலு என்ற தொடரில் 2013ல் அறிமுகமானார்.
நடிகை ரச்சித்தா மகாலட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி தொடர்களில் நடித்துவருகிறார்.
சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் நடிகை ரச்சித்தா தலைகாட்டியுள்ளார். இவர் 2015ல் உப்பு கருவாடு என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
நடிகை ரச்சித்தா தற்போது தெலுங்கில் தள்ளி மனசு என்ற படத்தில் நடித்துவருகிறார்.
ரச்சித்தா ஒரே ஒரு வெப் தொடரில் நடித்துள்ளார். அது லவ் யூ அபி ஆகும். ஜியோ சினிமாவில் இது ஒளிபரப்பாகிறது. கன்னட மொழியில் உருவான இந்தத் தொடரில் பிரேமா என்ற கதாபாத்திரத்தில் ரச்சித்தா நடித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.