Padayappa release 2025: ரி-ரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் ரூ.14 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Padayappa release 2025: ரி-ரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம் ரூ.14 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Published on: December 15, 2025 at 7:30 pm
சென்னை, டிச.15, 2025: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் படையப்பா.
இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தவிர நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகை சௌந்தர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தனர்.
மேலும், நடிகர்கள் நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, ராதாரவி, நாசர், அப்பாஸ், நடிகைகள் பிரீதா, சித்தரா, லெட்சுமி உள்ளிட்டோரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு டிச.12ஆம் தேதி ரி-ரீலிஸ் செய்யப்பட்டது.
வசூல் நிலவரம்
இந்த நிலையில் படம் உலகளவில் கடந்த 3 நாள்களில் ரூ.14.80 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com