Dhanush Nayanthara copyright dispute case: நயன்தாரா மற்றும் பிறருக்கு எதிரான அசல் வழக்கில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை நீதிமன்றம் பிப்ரவரி 5 ஆம் தேதி விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

February 17, 2025
Dhanush Nayanthara copyright dispute case: நயன்தாரா மற்றும் பிறருக்கு எதிரான அசல் வழக்கில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை நீதிமன்றம் பிப்ரவரி 5 ஆம் தேதி விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Published on: January 28, 2025 at 6:29 pm
நயன்தாரா திருமண ஆவணப் பட வழக்கு: நடிகை நயன்தாரா மற்றும் பிறருக்கு எதிராக, ஆவணப்படத்தின் பதிப்புரிமை மீறல் தொடர்பாக காப்புரிமை மனுத்தாக்கல் செய்தது.
இந்த நிலையில், பதிப்புரிமை மீறல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள, இந்த சிவில் வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃபிளிக்ஸ் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜன.28, 2025) தள்ளுபடி செய்தது. தற்போது, நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் என்ற ஆவணப் படம் பதிப்புரிமை சிக்கலை சந்தித்து வருகிறது.
அதாவது, வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும், நெட்ஃபிளிக்ஸை ஒரு தரப்பாக சேர்க்கவும் நீதிபதி முன்பு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரிய மற்றொரு மனுவையும் நீதிபதி அப்துல் குத்தோஸ் தள்ளுபடி செய்தார்.
மேலும், நயன்தாரா மற்றும் பிறருக்கு எதிராக தாக்கல் செய்த அசல் வழக்கில் வுண்டர்பார் பிலிம்ஸ் தாக்கல் செய்த இடைக்கால மனுவை பிப்ரவரி 5 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
முன்னதாக, லாஸ் கேட்டோஸ் புரொடக்ஷன்ஸ் (நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனம்) சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தரப்பாக வுண்டர்பாருக்கு நீதிமன்றம் முன்பு வழங்கிய அனுமதியை நிராகரிக்கக் கோரியும், அசல் வழக்கை முழுமையாக நிராகரிக்கக் கோரியும் இரண்டு விண்ணப்பங்களை தாக்கல் செய்தது.
லாஸ் கேடோஸ் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர். பார்த்தசாரதி, வுண்டர்பரின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்னையில் இல்லாமல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறி, வுண்டர்பரின் வழக்கை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸின் இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2024ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, நயன்தாரா தனுஷ் மீது குற்றஞ்சாட்டி இருந்தார்.
நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்பட டிரெய்லர் வெளியான பிறகு, நானும் ரவுடி தான் படத்தின் மூன்று வினாடிகள் திரைக்கு பின்னால் படமாக்கப்பட்ட காட்சிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தனுஷ் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : ”புஷ்பா 2” ஓடிடி வெளியீடு அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com