Samantha Ruth Prabhu: ‘நோயுற்ற துணையை விட்டு வெளியேறும் ஆண்கள்’ மற்றும் உறவுகளை கைவிடுவது பற்றிய பதிவை சமந்தா ரூத் பிரபு லைக் செய்துள்ளார்.
Samantha Ruth Prabhu: ‘நோயுற்ற துணையை விட்டு வெளியேறும் ஆண்கள்’ மற்றும் உறவுகளை கைவிடுவது பற்றிய பதிவை சமந்தா ரூத் பிரபு லைக் செய்துள்ளார்.
Published on: April 21, 2025 at 11:59 am
ஹைதராபாத், ஏப்.21 2025: சமீபத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு, ஆண்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட துணையை எப்படி விட்டுச் செல்கிறார்கள் என்பது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவை லைக் செய்துள்ளார். இது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆண்களால் ‘உறவுகளைக் கைவிடுவது’ பற்றிய விவாதத்தை உள்ளடக்கிய இந்தப் பதிவு, இன்ஸ்டாகிராமில் 60,000 லைக்குகளைப் பெற்றுள்ளது.
சமீபத்தில், சக்சஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம், டைரி ஆஃப் எ சிஇஓ என்ற யூடியூப் சேனலால் முதலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவின் சில பகுதிகளைப் பகிர்ந்து கொண்டது.
இந்தப் பதிவில், “ஆண்கள் ஏன் நோய்வாய்ப்பட்ட துணையை விட்டுச் செல்கிறார்கள்” எனக் கூறியிருந்தது. மேலும் அதில், ஆண்கள் தங்கள் துணைக்கு நோய்வாய்ப்பட்டால் 624% அதிகமாக அவர்கள் பிரிந்து செல்வார்கள்.
அதே நேரத்தில் பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்வாய்ப்பட்ட வாழ்க்கைத் துணையை அங்கேயே தங்கி கவனித்துக்கொள்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சமந்தாவுக்கு மயோசிடிஸ் பாதிப்பு
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டில், குணப்படுத்த முடியாத ஆட்டோ இம்யூன் நோயான மயோசிடிஸுடன் தான் போராடி வருவதாக சமந்தா தெரிவித்தார். மயோசிடிஸ் என்பது உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு தசைகளைத் தாக்கி, வலி, பலவீனம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிலை.
சக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குப் பிறகு நட்சத்திரம் தனது நோயைப் பற்றி மனம் திறந்து பேசினார். இருவரும் 2015 இல் டேட்டிங் செய்யத் தொடங்கி 2017 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இந்த ஜோடி சில ஆண்டுகளில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வீர தீர சூரன் இரண்டாம் பாகம் ஓடிடி ரிலீஸ்: தேதியை செக் பண்ணுங்க.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com