uruttu uruttu: மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாயகனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்திற்கு உருட்டு உருட்டு என பெயரிடப்பட்டுள்ளது.
uruttu uruttu: மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாயகனாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்திற்கு உருட்டு உருட்டு என பெயரிடப்பட்டுள்ளது.

Published on: April 18, 2025 at 7:16 pm
சென்னை, ஏப்ரல் 18 2025: தமிழ் சினிமாவின் நகைச்சுவை முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் நாகேஷ். நடிகர் திலகம் சிவாஜி உடன் இவர் இணைந்து நடித்த திருவிளையாடல் தருமி கதாபாத்திரம் , இன்றளவும் உயிர்ப்புடன் காணப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். மேலும் மற்ற மொழி படங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவரின் மகன் ஆனந்தபாபு. ஆனந்தபாபுவும் நடிகராக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சேரன் பாண்டியன் போன்ற வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இவரின் மகன்தான் கஜேஷ்.
கஜேஷ் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு உருட்டு உருட்டு என பெயரிட்டுள்ளனர். படத்தை பாஸ்கர் சதாசிவம் என்பவர் கதை திரைக்கதை வசனம் மற்றும் ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்துள்ளார்.
இவர் இந்தப் படத்தின் கதை குறித்தும் பகிர்ந்து கொண்டார். கடந்த காலங்களிலும் கருத்தரிப்பு மையங்கள் குறைவாக காணப்படும்; இப்போது எங்கு பார்த்தாலும் இதன் விளம்பரங்கள் காணப்படுகின்றன.
குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா? எங்களிடம் வாருங்கள் என்பன போன்ற விளம்பரங்களையும் பார்க்க முடிகிறது. இதனை நகைச்சுவை உணர்வோடு மெசேஜாக மக்களுக்கு கொடுத்துள்ளோம்” என்றார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: நடிகை நித்யா மேனனின் ஆல் டைம் ஃபேவரைட் படங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com