David Warner in a Telugu film: ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ராபின்ஹுட் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க இவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
David Warner in a Telugu film: ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ராபின்ஹுட் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க இவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Published on: March 28, 2025 at 9:26 am
தெலுங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ராபின்ஹூட். இந்தப் படத்தில் நாயகனாக நிதின் நடித்துள்ளார். வெங்கி குடுமலா என்பவர் எழுதி படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அண்மையில் கவர்ச்சி பாடல் ஒன்று மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளார்.
முன்னதாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டேவிட் வார்னர், புஷ்பா படத்தில் ஸ்டெப் போட்டு ரசிகர்களை கவர்ந்தார். ராபின்ஹுட் படத்தில் கெட்டிகா சர்மா கவர்ச்சி பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.
இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ராபின்ஹூட் படத்தில் நடித்ததற்காக டேவிட் வார்னருக்கு அளிக்கப்பட்ட சம்பளத் தொகை குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி ராபின்ஹூட் படத்தில் நடித்த டேவிட் வார்னருக்கு சம்பளமாக ரூபாய் 2.5 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தெலுங்கு திரை உலகை பொருத்தவரை ஒரு சிறிய ரோலில் நடிக்க இவ்வளவு பெரிய தொகை வேறு எந்த நடிகர்களுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இரவு நேர சூட்டிங்.. சாய் பல்லவி பதில் இதுதான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com