கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறாரா கமல்ஹாசன்? பரபரப்பு தகவல்கள்!

Kalki 2898 AD: கல்கி திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க கூடும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: March 7, 2026 at 9:52 pm

ஹைதராபாத் மார்ச் 7, 2026; மகாபாரத புராண கதைமாந்தர்களை வைத்து அறிவியல் புனைவாக வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி. நாக் அஸ்வின் இயக்கத்தில் தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது.

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

2024-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்த கமல்ஹாசனின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்று முன்னரே சொல்லப்பட்டது. முதல் பாகத்தை பிரமாண்டமாக தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.

தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. நீண்ட வருடங்கள் கழித்து கமலுடன் அமிதாப் பச்சன் ஒன்றாக நடிப்பது குறித்து அமிதாப் பச்சன், தனது மகிழ்ச்சியை இணையத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க : ரஜினி, விஜய் அனுபவம்.. நல்ல கதை மொழி எல்லைகளை கடந்து வெல்லும்.. நடிகை மாளவிகா மோகனன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com