நடிகை காதல் சரண்யா வலையொளி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
நடிகை காதல் சரண்யா வலையொளி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
Published on: September 2, 2024 at 5:03 pm
Kadhal Saranya latest Interview |“நானும் ஆரம்ப காலக்கட்டத்தில் சிக்கலை எதிர்கொண்டேன்; ஆண்களுக்கு பெண்களின் மார்பகங்களை பார்த்தால் உணர்ச்சி வந்துவிடுமா? என காதல் படத்தின் நடிகைக்கு தோழியாக நடித்த சரண்யா கேள்வியெழுப்பியுள்ளார்.
நடிகை காதல் சரண்யா வலையொளி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். பாலாஜி சக்கி வேலின் இயக்கத்தில் 2004ல் வெளியான படம் காதல்.
இந்தப் படம் பள்ளிப் பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. படத்தில் பள்ளி பயிலும் மாணவியாக சந்தியா நடித்திருப்பார். இவருக்கு தோழியாக சரண்யா நடித்திருப்பார்.
தொடர்ந்து பல படங்களில் நாயகி சந்தியா கமிட் ஆனார். படத்தின் நாயகன் பரத்தும் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். எனினும் படம் அக்காலக்கட்டத்தில் சில விமர்சனங்களை எதிர்கொண்டது.
பள்ளி பருவ மாணவ- மாணவியரை படத்தில் உள்ள சில காட்சிகள் காதல் செய்ய தூண்டுகின்றன என்றெல்லாம் விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் படத்தில் நடிகை சரண்யா தோழியாக நடித்த சரண்யா, தற்போது யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மலையாளத்தில் புயலை கிளப்பியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசினார்.
அப்போது, “ஆரம்ப காலக்கட்டத்தில் சில அசவுகரியங்களை தாமும் சந்தித்தேன்” என்றார். மேலும், “பெண்களின் மார்பகங்களை பார்த்தால், ஆண்களுக்கு உணர்ச்சி வந்துவிடுமா? என்றார்.
இதையும் படிங்க: இரவில் கதவை தட்டும் நடிகர்கள்; சினிமா கேரவனில் இரகசிய கேமரா: நடிகை ராதிகா குற்றச்சாட்டு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com