அதிக வரி செலுத்திய நட்சத்திரங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
அதிக வரி செலுத்திய நட்சத்திரங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
Published on: September 6, 2024 at 12:35 pm
Updated on: September 6, 2024 at 12:36 pm
Actor Vijay | அதிக வரி செலுத்தும் இந்திய நட்சத்திரங்கள் பட்டியலை ஃபார்சூன் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நட்சத்திரம் நடிகர் விஜய் மட்டும்தான்.
இவர் முதலிடத்தில் உள்ள ஷாருக்கானுக்கு அடுத்தப்படியாக 2ம் இடத்தில் உள்ளார். 3ம், 4ம் இடத்தில் சல்மான் கான் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் உள்ளனர்.
பிரபல கிரிக்கெட்டர் விராத் கோலி ரூ.66 கோடி வரி கட்டி 5ஆம் இடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் நடிகர் அஜய் தேவ்கன், மகேந்திர சிங் தோனி, ரன்பீர் கபூர், ஹிருத்திக் ரோஷன் மற்றும் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர்.
10வது இடத்தில் உள்ள சச்சின் தெண்டுல்கர் ரூ.28 கோடி வரி கட்டியுள்ளார். முதல் இடத்தில் உள்ள ஷாருக்கான் ரூ.92 கோடியும், 2ம் இடத்தில் உள்ள விஜய் ரூ.80 கோடியும் வரி கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com