Kalaingar Tv | கருடன் திரைப்படம் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகிறது.
கன்னட பிக் பாஸ் வீட்டுக்கு சீல்.. அதிகாரிகள் நடவடிக்கை ஏன்?
Bigboss Kannada: கர்நாடகாவில் பிக் பாஸ் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்….
Kalaingar Tv | கருடன் திரைப்படம் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாகிறது.
Published on: October 4, 2024 at 5:55 pm
Kalaingar Tv | கலைஞர் டிவியின் ஆயுத பூஜை விடுமுறை நாள் சிறப்பு திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கலைஞர் தொலைக்காட்சியில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி வருகிற அக்டோபர் 11 வரும் வெள்ளி காலை 9.00 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் மக்களின் மகிழ்வை பெரிதும் தீர்மானிப்பது மனமா? பணமா? என்கிற தலைப்பில் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.
பின்னர், பிற்பகல் 1.30 மணிக்கு கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, காஷ்மீரா, அனிகா சுரேந்திரன், பிரபு, இளவரசு, பாண்டியராஜன், தியாகராஜன், முனீஷ்காந்த் மற்றும் தேவதர்ஷினி என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த “பிடி சார்” கலகலப்பான திரில்லர் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.
அக்டோபர் 12-ந் தேதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் இந்த ஆண்டு சக்க போடு போட்ட, “கருடன்” சூப்பர்ஹிட் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. கதையின் நாயகனாக சூரி நடித்துள்ள இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷ்னி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதுதவிர மேலும் சில சிறப்பு திரைப்படங்களும், சிறப்பு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Bigboss Kannada: கர்நாடகாவில் பிக் பாஸ் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்….
Joy Crizildaa vs Madhampatty Rangaraj: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி…
Priyanka deshpande marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, வசி என்பவரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர்….
Priyanka Deshpande Marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது….
உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி – மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2 தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com