Rohit Shettys Mumbai Home: பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
Rohit Shettys Mumbai Home: பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் வீட்டின் அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Published on: February 1, 2026 at 9:50 am
Updated on: February 1, 2026 at 9:59 am
மும்பை, பிப்.1, 2026: ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலை 12.43 மணியளவில் பாலிவுட் திரைப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் மும்பை இல்லம் அருகே நான்கு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
#WATCH | Mumbai, Maharashtra | Police and forensic teams reach Director Rohit Shetty's residence, after an incident of firing was reported outside his residence. Further details awaited. pic.twitter.com/h1wVhtCtY7
— ANI (@ANI) January 31, 2026
இந்தச் சம்பவம் ஜூஹுவில் உள்ள ஷெட்டியின் இல்லம் அருகே நடந்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை போலீசார் கூடுதல் காவலர்களை அங்கு பாதுகாப்பு பணிக்காக நியமித்துள்ளனர்.
தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிய பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் நோக்கம் இன்னும் தெரியவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசும், தடய அறிவியல் குழுவும் சம்பவ இடத்தில் இருந்து தாக்குதலாளர்களை கண்டறிய ஆய்வுகள் செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், திரைப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் இல்லம் வெளியே போலீஸ் வாகனங்கள், தடுப்புகள் மற்றும் அதிகாரிகள் நிற்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
எனினும், ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்தத் துப்பாக்கிச் சூடு எச்சரிக்கை நோக்கத்திற்காக நடத்தப்பட்டதா அல்லது வேறு காரணத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகை கேத்ரின் ஓ’ஹாரா மரணம்.. உலகம் முழுக்க ரசிகர்கள் இரங்கல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com