Viral Mahakumbh Girl Weds: கும்பமேளா வைரல் பெண் மோனலிசா, ஃபர்மான் கான் என்பவரை திருமணம் செய்து மீண்டும் வைரலாகியுள்ளார்.
Viral Mahakumbh Girl Weds: கும்பமேளா வைரல் பெண் மோனலிசா, ஃபர்மான் கான் என்பவரை திருமணம் செய்து மீண்டும் வைரலாகியுள்ளார்.

Published on: March 16, 2026 at 12:18 pm
திருவனந்தபுரம், மார்ச் 16, 2026: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஃபர்மான் கான் என்பவர் வைரலான மகாகும்பமேளா பெண் மோனாலிசாவை கேரளாவில் திருமணம் செய்துள்ளார். இவர்களின் காதல் கதை ‘லவ் ஜிஹாத்’ அல்ல என்று அவர் கூறியுள்ளார். மகா கும்பமேள விழாவில் பிரபலமான மோனாலிசா, பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஃபர்மான் கானை திருமணம் செய்தார். இப்போது, அவரது கணவர் பற்றி அறிந்துகொள்வோம்.
யார் இந்த ஃபர்மன் கான்?
VIDEO | Monalisa Bhonsle, a young woman who shot to fame during the Prayagraj Kumbh Mela, tied the knot with her friend, a Muslim man, at a temple in nearby Poovar in Kerala's Thiruvananthapuram, hours after seeking police protection to evade the family's pressure.
— Press Trust of India (@PTI_News) March 11, 2026
With a… pic.twitter.com/S26CkWZtgo
உத்தரப் பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபர்மான் கான். இவர் நடிகரும் மாடலுமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய மோனாலிசா, ஃபர்மனும் நானும் ஆறு மாதங்கள் காதலித்து வந்ததாக தெரிவித்தார். அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் நண்பர்களாகி, பின்னர் ஒரு திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர் என்றும் மோனலிசா கூறினார்.
இதையும் படிங்க: ஆஸ்கார் விழாவில் பரபரப்பு.. உயிர் தப்பிய பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ்!
லவ் ஜிகாத் அல்ல.. 60 ஆண்டு காதல்
இந்நிலையில், அவர்களின் காதல் காலத்தை ‘அறுபது ஆண்டுகளின் காதல்’ என்று விவரித்த ஃபர்மன், இது லவ் ஜிகாத் அல்ல என்றும் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், “இந்த ஆறு மாதங்கள் அறுபது ஆண்டுகளின் காதலைப் போல இருந்தது, அதனால் தான் நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தோம். நாங்கள் ஒரு படப்பிடிப்பின் போது சந்தித்தோம். ஒன்றாக வேலை செய்தோம். அப்போது எங்களுக்குள் பேசும் வாய்ப்பு கிடைத்தது, பேசினோம். எங்கள் காதல் திருமணத்தில் முடிந்துள்ளது” என்றார்.
மோனலிசா மறுப்பு
இந்த நிலையில் ஃபர்மனின் காதலுக்கு முதலில் மோனலிசா மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய மோனலிசா, “நான் ஆரம்பத்தில் மறுத்தேன், ஆனால் அவர் என்னை சம்மதிக்க வைத்தார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: முன்பதிவில் சதம் அடித்த துரந்தர்-2.. வசூல் எவ்வளவு தொகை தெரியுமா?
Madhavaram Encounter: Ganesh Killed: சென்னையில் போலீஸ் என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி ஆர். கணேஷ் என்ற தொப்பை கணேஷ் மரணமடைந்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
West Asia Conflict Halts F1 Grands Prix: ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருந்த பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளை, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஃபார்முலா 1 ஒத்திவைத்துள்ளது.
Iran Israel War:: விமானம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், துபாய் விமான நிலையங்கள் மூடப்பட்டன.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com