Dhurandhar 2 Breaks Global Records: ‘துரந்தர் 2’ படத்தின் முன்பதிவுகள் உலகளவில் ₹100 கோடியை கடந்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
September 16, 2026
Dhurandhar 2 Breaks Global Records: ‘துரந்தர் 2’ படத்தின் முன்பதிவுகள் உலகளவில் ₹100 கோடியை கடந்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: March 16, 2026 at 11:44 am
புதுடெல்லி, மார்ச் 16, 2026: ‘துரந்தர் 2’ படத்தின் முன்பதிவுகள் உலகளவில் ₹100 கோடியை கடந்துள்ளன; ரன்வீர் சிங் நடித்த இந்த படம், அமெரிக்காவில் ‘பதான்’, இயக்குனர் ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் முன்பதிவுகள் அதிவேகமாக நடைபெற்று, இந்தியாவில் மட்டும் முதல் நாள் மற்றும் முன்னோட்ட காட்சிகளுக்காக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
அதித்யா தரின் உளவு த்ரில்லர் படமான துரந்தர், மார்ச் மாதம் 19ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மார்ச் 18 மாலை ‘Paid Preview Shows’ நடைபெற உள்ளது. இந்த தொடர்ச்சி, இந்திய திரைப்படங்களுக்கு இதுவரை இல்லாத மிகப்பெரிய பிரீமியரை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் முன்னோட்ட காட்சிகளிலிருந்து ₹32.44 கோடி வசூலித்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க; ஆஸ்கார் விழாவில் பரபரப்பு.. உயிர் தப்பிய பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ்!
மேலும், கடந்த ஆண்டு பவன் கல்யாணின் ‘OG’ படம் ₹25 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், ‘துரந்தர் 2’ புதன்கிழமைக்குள் ₹40 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர். மாதவன்
ரன்வீர் சிங்கைத் தவிர, ‘துரந்தர் 2’ படத்தில் ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் மற்றும் ராகேஷ் பேடி ஆகியோரும் மீண்டும் நடித்துள்ளனர்.. முதல் பாகத்தில் எதிரி ரெஹ்மான் டகாயத் கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷயே கண்ணா, இந்த தொடர்ச்சியில் சிறிய தோற்றத்தில் (cameo) வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க; பரத்தின் காளிதாஸ் 2 ஏப்ரல் ரிலீஸ்.. 26 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சங்கீதா மாதவன்!
CM Vijay: முதலமைச்சர் விஜயின் லண்டன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Anbil Mahesh Poyyamozhi: தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் (CCB) சோதனை நடத்தியது.
Rentomojo IPO: ரென்டோமோஜோ IPO பங்குகள் ஒதுக்கீடு செப்டம்பர் 15, 2026 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. IPO 72.88 மடங்கு சந்தாதாரர்களால் பதிவு செய்யப்பட்ட நிலையில், பங்குகள் செப்டம்பர் 17, 2026 அன்று தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com