இந்த இரு நடிகர்களின் உண்மையான பெயர்கள் தெரியுமா? தற்போது இவர்கள் வைத்திருக்கும் பெயர் நியூமராலஜி படிவைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரு நடிகர்களின் உண்மையான பெயர்கள் தெரியுமா? தற்போது இவர்கள் வைத்திருக்கும் பெயர் நியூமராலஜி படிவைக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Published on: December 9, 2024 at 1:23 pm
Real Name of Actors | களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகையே திருப்பி பார்க்க வைத்தவர் விமல். அசாத்தியமான நடிப்புக்கு சொந்தக்காரர் இவர், விஜய் சேதுபதி சினிமாவில் உச்சம் தொடுவதற்கு முன்பே பல்வேறு பாணிகளில் நடித்தவர்.
அதேபோல் மைனா திரைப்படத்தில் ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திருப்பியவர் நடிகர் விதார்த். நடிகர் அஜித்குமாரின் வீரம் திரைப்படத்தில் அவரின் 4 தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார். அஜித் குமாரின் ஒவ்வொரு அசைவுக்கு ஏற்றால் போல் விதார்த் அந்த படத்தில் ஸ்கோர் செய்திருப்பார்.
இந்த இரு நடிகர்களும் நடிப்பில் அசாத்தியமான திறமை கொண்டவர்கள்; இதற்கு இவர்களின் கடந்த கால படங்களை சாட்சியாக உள்ளன. இந்த இரு நடிகர்களின் உண்மையான பெயர்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் வியப்பு என்னவென்றால், இருவரும் ரமேஷ் என்ற இயற்பெயரைக் கொண்டவர்கள். இந்தப் பெயரை நியூமராலஜி படி மாற்றிக் கொண்டுள்ளனர். அதன்படி விமல் மற்றும் விதார்த் என்ற இரு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதில் தற்போதைய விதார்த் விமல் என்ற பெயரை தேர்வு செய்து உள்ளார். ஏனெனில் அவருக்கு கமல்ஹாசன் பிடிக்குமாம். இதற்கிடையில் தற்போதைய விமல், விமல் என்ற பெயரை தட்டிச் சென்று விட்டார். அதன்பின்னர் மீதமிருந்த பெயரை நடிகர் விதார்த் எடுத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறிய இந்த செய்தி, தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com