இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
Published on: November 15, 2024 at 2:34 pm
Highest paid Actor | இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொருத்தமட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற இடத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கான் இருந்து வந்தார்.
ஆனால் சமீப காலங்களில் பான் இந்தியா படங்களில் தெலுங்கு படங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. குறிப்பாக பாகுபலி யின் வருகைக்கு பின்னர், தெலுங்கு படங்களுக்கு மவுசு கூடியது. இதைத்தொடர்ந்து அந்த படங்கள் தமிழ், கன்னடம், ஹிந்தி என மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டன. இந்த நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தான் புஷ்பா.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு மிகவும் போற்றப்பட்டது. அவரின் நடனம் மிகவும் அழகாக இருந்ததாக பலரும் கருத்துக்கள் தெரிவித்து இருந்தனர். படமும் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 300 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான், தளபதி விஜய், பாகுபலி பிரபாஸ், கன்னட நடிகர் யஸ் ஆகியோர் இடம் பெறுவார்கள். இந்த நிலையில் இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க சூர்யா தவறவிட்ட 5 படங்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com