Janhvi Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், ஃபேன்ஸ் ஃபேஜஸ் (ரசிகர் பக்கங்கள்) என்ற பெயரில் ஆபாச தாக்குதல்களை எதிர்கொண்டுவருகிறார் எனக் கூறப்படுகிறது.
Janhvi Kapoor: மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், ஃபேன்ஸ் ஃபேஜஸ் (ரசிகர் பக்கங்கள்) என்ற பெயரில் ஆபாச தாக்குதல்களை எதிர்கொண்டுவருகிறார் எனக் கூறப்படுகிறது.

Published on: August 12, 2026 at 3:04 pm
புதுடெல்லி, ஆக.12, 2026: டெல்லி உயர் நீதிமன்றம் நடிகை ஜான்வி கபூருக்கு ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான உள்ளடக்கங்களிலிருந்து நிவாரணம் வழங்கியுள்ளது. இணையத்தில் வெளிப்படையாக ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்களை நீக்குமாறு உத்தரவிட்டாலும், ரசிகர் பக்கங்களை முழுமையாகத் தடுக்க வேண்டிய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
ஜான்வி கபூர், தனது புகைப்படங்கள் மற்றும் ஆளுமை உரிமைகள் வணிக நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்படாமல் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 5,000-க்கும் மேற்பட்ட இணையப் பக்கங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் கோரினார்.
நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி, ஆபாசமான உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெற கபூர் தகுதியுடையவர் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால், மனுதாரரின் வழக்கறிஞர்கள் துல்லியமான பட்டியலைத் தயாரித்து, எந்த இணையப் பக்கங்கள் ஆபாச உள்ளடக்கங்களை கொண்டுள்ளன என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ரசிகர் பக்கங்களை நீக்குவதற்கான கோரிக்கையை நீதிமன்றம் மறுத்தது. ரசிகர் தளங்கள் பல வகைகளில் இருக்கலாம் — சிலர் நடிகையின் பணியைப் பாராட்டலாம், சிலர் விமர்சிக்கலாம், சிலர் நையாண்டி செய்யலாம். இவை அனைத்தும் பேச்சுரிமையின் வரம்பிற்குள் வருகின்றன என்று நீதிபதி பம்பானி குறிப்பிட்டார்.
அதில், இவ்விஷயத்தில் தீர்வானது பிரச்சனையை விட மோசமானதாக அமையலாம். இது பேச்சுரிமையின் அடிப்படையிலேயே உள்ளது. ரசிகர் பக்கங்கள் உங்கள் பணியை நையாண்டி செய்யலாம், பாராட்டலாம் அல்லது விமர்சிக்கலாம். உங்களுக்கு ரசிகர்கள் வேண்டாமா? இது டிஜிட்டல் உலகம். கருத்துகள் இல்லை, இணைய முகவரிகள் இல்லை என்றால்… நீங்கள் ஒரு குகையில் வாழ வேண்டியிருக்கும்,” என்றார்.
இதையும் படிங்க : விபத்தில் சிக்கிய ஏ.ஆர். ரஹ்மான் மகன்.. ‘நான் கார் ஓட்டவில்லை’ என விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com