Anurag Kashyap: சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பூலே’ தொடர்பான சர்ச்சை குறித்து அனுராக் காஷ்யப் கேள்வி எழுப்பியிருந்தார்.
Anurag Kashyap: சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பூலே’ தொடர்பான சர்ச்சை குறித்து அனுராக் காஷ்யப் கேள்வி எழுப்பியிருந்தார்.
Published on: April 19, 2025 at 11:24 pm
இந்தூர், ஏப்.19 2025: சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ் பூலேவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பூலே’ தொடர்பான சர்ச்சை குறித்து அனுராக் காஷ்யப் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் பிராமணர்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.
அனுராக் காஷ்யப் மீது வழக்குப்பதிவு
இதற்கிடையில், அனுராக் காஷ்யப் மீது காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தப் புகார்களின் அடிப்படையில் அவர் மீது இந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, எம்ஜி சாலை காவல் நிலைய பொறுப்பாளர் விஜய் சிங் சிசோடியா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “பிராமணர் சமூகத்தின் சமூக மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது அனூப் சுக்லா புகார் அளித்துள்ளார்” என்றார்.
அனுராக் காஷ்யப் கருத்துக்களுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் பொது மன்னிப்பு கோரினார். அப்போது, தமது குடும்பத்துக்கு மிரட்டல்கள் வருகின்றன எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையில், வழக்கறிஞர் ஆஷிஷ் ராய், “காஷ்யப் மீது மும்பை காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : பிராமணர்கள் மீதான இழிவான கருத்து: அனுராக் காஷ்யப் பொது மன்னிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com