மேற்கு வங்க நடிகை பாயல் முகர்ஜியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
மேற்கு வங்க நடிகை பாயல் முகர்ஜியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
Published on: August 25, 2024 at 12:31 pm
Updated on: August 25, 2024 at 1:23 pm
மேற்கு வங்கத்தில் நடிகை ஒருவரை, பைக் ரைடர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. அடையாளம் தெரியாத பைக் ரைடரால் தாக்கப்பட்ட நடிகை பாயல் முகர்ஜி ஆவார். இவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் காரில் பயணித்துள்ளார். அப்போது வேகமாக வந்த பைக் ரைடர் ஒருவர் பாயல் பயணித்த காரில் மோதியுள்ளார்.
தொடர்ந்து கோபமுற்ற பைக் ரைடர், கார் கண்ணாடியை திறக்கும்படி கூறியுள்ளார். ஆனால், பாயல் முகர்ஜி கார் கண்ணாடியை திறக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமுற்ற பைக் ரைடர், பாயல் இருந்த காரின் கண்ணாடியை குத்தி உடைத்துள்ளார்.
Bengali actress Payel Mukherjee got attacked by a man in Southern Avenue – a very posh area in Kolkata.
— BALA (@erbmjha) August 23, 2024
This is the condition of women in the so-called "safest state" under the only woman CM of India. pic.twitter.com/cFSxho414o
அதில் இருந்து சிதறிய கண்ணாடி துகள்கள் பாயலின் முகம் மற்றும் உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்து புகார் அளிக்க உள்ளதாக பாயல் முகர்ஜி கூறியுள்ளார்.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com