Arjun say about Giri film: தான் நடித்த சினிமா காட்சி ஒன்று இன்றளவும் தமக்கு நகை பூட்டுவதாக அர்ஜுன் கூறியுள்ளார். இந்தப் படத்தின் காட்சி தற்போது வரை வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.
Arjun say about Giri film: தான் நடித்த சினிமா காட்சி ஒன்று இன்றளவும் தமக்கு நகை பூட்டுவதாக அர்ஜுன் கூறியுள்ளார். இந்தப் படத்தின் காட்சி தற்போது வரை வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.
Published on: February 23, 2025 at 8:00 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம் நடிகர் அர்ஜுன். இவரின் சண்டைக் காட்சி, பாடல் நடனம் என இவருக்கென்ன ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் அண்மையில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் விஜய் உடன் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். எனினும் இவர் ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் அர்ஜுன் படம் என்றாலே சண்டை காட்சிகள் உட்பட பாடல் காட்சிகள் வரை மிகவும் நேர்த்தியாக இருக்கும். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் அர்ஜுன் தான் கடந்த காலத்தில் நடித்த படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். இந்த நகைச்சுவை காட்சி குறித்து பேசிய நடிகர் அர்ஜுன், இன்றளவும் தம்மிடம் சிலர் இந்த காட்சியைப் பற்றி கேட்பதாக விவரித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடித்திருந்த படம் கிரி. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் வடிவேல் கூட்டணியில் உருவான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இது தொடர்பாக பேசியுள்ள நடிகர் அர்ஜுன், ” கிரி படத்தில் வரும் வடிவேலின் அக்கா காமெடியை பலரும் இன்றளவும் என்னிடம் கேட்கிறார்கள்; இந்த காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்றும் என்னிடம் கேட்பார்கள்.
ஏன் என்னை இப்போது பார்த்தாலும் அதில் யாராவது ஒருவர் இந்த காமெடி குறித்து கேட்பார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்” என்றார். கிரி படத்தில் உருவான இந்த காமெடி காட்சி குறித்து ஏற்கனவே இயக்குனர் சுந்தர் சி பலமுறை விளக்கம் கொடுத்துள்ளார். அப்போது இந்த காட்சிக்கு மறைந்த குணச்சித்திர நடிகர் சிவா உதவியாக இருந்தார். அவரின் குரல் இந்த காமெடிக்கு மிகவும் பொருந்தி போனது. முதலில் நாங்கள் ஒரு சேட் இதை கேட்பது போல் தான் வைத்திருக்க நினைத்தோம். பின்னாளில் இந்த காமெடி காட்சியில் சிவா தோன்றினார். சிவாவின் குரல் இந்த காமெடி காட்சிக்கு மிகவும் வலு சேர்த்தது” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பாக்ஸ்ஆபிஸில் மாஸ் காட்டும் தண்டேல்: இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com