AR Rahman admitted to Apollo Hospital : இசைபுயல் ஆஸ்கார் நாயகன் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
AR Rahman admitted to Apollo Hospital : இசைபுயல் ஆஸ்கார் நாயகன் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Published on: March 16, 2025 at 12:00 pm
Updated on: March 16, 2025 at 3:37 pm
சென்னை மார்ச் 16, 2025: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு (மார்ச் 15, 2025) அனுமதிக்கப்பட்டார். 58 வயதான ஏ.ஆர் ரஹ்மானுக்கு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏ.அர் ரஹ்மான் தற்போது, இசைத் திட்டங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் பிஸியாக காணப்பட்டார். கடந்த மாதம் சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது பாடகர் எட் ஷெரனுடன் இணைந்தார். இந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சு வலி இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 6 வயது குழந்தையின் தாய்.. யார் இந்த கெளரி? அமீர் கானின் புதிய காதலி?
முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட்
இசைப்புயல் @arrahman அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
— M.K.Stalin (@mkstalin) March 16, 2025
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!
இதற்கிடையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விடுத்துள்ள ட்வீட்டில், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான், அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! எனத் தெரிவித்துள்ளார்.
வீடு திரும்பினார் ஏ ஆர் ரகுமான்
நெஞ்சு வலி உள்ளிட்ட உடல் நலக்குறைவால் சென்னை கிரீன் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு
சமீபத்தில், ரஹ்மானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு உடல் நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். இந்தச் செய்தியை அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் பகிர்ந்து கொண்டார். ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி கிட்டத்தட்ட 29 வருட திருமண வாழ்க்கைக்கு பின்னர் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :NEEK OTT Release Date: தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. எந்த ஒடிடி தளத்தில் ரிலீஸ் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com