ஜெயா பச்சனுக்கு ஒருமுறைகூட டீ போட்டுக் கொடுத்ததில்லை! ஏனென்றால்.. அமிதாப் பச்சன் சொன்ன சுவாரசிய தகவல்

Big B’s Tea Secret: ‘கௌன் பனேகா குரோர்பதி 18’ நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப் பச்சனிடம், தனது மனைவி ஜெயா பச்சனுக்கு எப்போதாவது டீ போட்டுக் கொடுத்திருக்கிறாரா என்று போட்டியாளர் பத்மினி கேட்டார். அதற்கு, தனது வாழ்நாளில் ஜெயா பச்சனுக்கு ஒரு கப் டீ கூட போட்டுக் கொடுத்ததில்லை என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

Published on: September 1, 2026 at 4:29 pm

மும்பை, செப். 1 2026: பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், தனது மனைவியும் நடிகையுமான ஜெயா பச்சனுக்கு இதுவரை ஒரு கப் டீ கூட போட்டுக் கொடுத்ததில்லை என தெரிவித்துள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘கௌன் பனேகா குரோர்பதி 18’ நிகழ்ச்சியில் போட்டியாளர் பத்மினி, அமிதாப் பச்சனிடம் அவரது மனைவிக்கு எப்போதாவது டீ போட்டுக் கொடுத்திருக்கிறாரா என கேள்வி எழுப்பியபோது இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமிதாப் பச்சன், தனக்கு டீ போடத் தெரியாது என நகைச்சுவையாக குறிப்பிட்டார். அவரது இந்த பதில் நிகழ்ச்சியில் கலகலப்பை ஏற்படுத்தியது.

முன்னதாகவும் ‘கௌன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் தனது குடும்ப வாழ்க்கை மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் தொடர்பான பல்வேறு சுவாரசிய தகவல்களை அமிதாப் பச்சன் பகிர்ந்து கொண்டுள்ளார். வீட்டில் பணியாளர்கள் இல்லாத நேரங்களில் வீட்டு வேலைகளில் உதவுவது குறித்தும் அவர் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

நீண்டகாலமாக பாலிவுட்டின் பிரபல தம்பதியாக வலம் வரும் அமிதாப் பச்சன் – ஜெயா பச்சன் குறித்து அமிதாப் பச்சன் பகிரும் இந்த சுவாரசிய தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, ஜெயா பச்சனுக்கு டீ கூட போட்டுக் கொடுத்ததில்லை என்ற அவரது வெளிப்படையான பதில் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com