Aishwarya Rai: முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், தனது தாயாருடன் வசிக்கிறாரா? உண்மை என்ன?
Aishwarya Rai: முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், தனது தாயாருடன் வசிக்கிறாரா? உண்மை என்ன?
Published on: September 17, 2025 at 12:58 pm
பெங்களூரு, செப்.17, 2025: முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். இந்த ஜோடிக்கு ஆரத்யா என்ற அழகிய மகள் உள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் தனது தாயாருடன் வசிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனும் மௌனம் காக்கிறார். இந்த விவகாரத்தில் உண்மை என்ன?
இந்த நிலையில், சமீபத்தில் விக்கி லால்வானிக்கு அளித்த பேட்டியில், ஐஸ்வர்யா ராயின் பக்கத்து வீட்டுக்காரரான திரைப்படத் தயாரிப்பாளர் பிரஹ்லாத் கக்கர் இது பற்றிய உண்மையை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.இவர் ஐஸ்வர்யா ராயின் தாயார் வசிக்கும் அதே கட்டிடத்தில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், பிரஹ்லாத், “ஐஸ்வர்யா ராயின் தாயாருக்கு தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால், தான் அடிக்கடி தனது தாயாரைப் பார்க்க ஐஸ்வர்யா ராய் செல்கிறார்” என்றார்.மேலும், “ஐஸ்வர்யா வழக்கமாக தனது மகளை பள்ளியில் விட்டுவிட்டு பின்னர் தனது தாயாரை பார்க்க செல்கிறார்” என்றார்.
தொடர்ந்து, “ஐஸ்வர்யா தனது தாயாருடன் மிகவும் நெருக்கமானவர் என்றும், அவரைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும் அவர் கூறினார்.பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தொடர்பான வதந்திகள் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளன. இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் அந்த வதந்திகள் காணப்படுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக அபிஷேக் பச்சன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மௌனம் காத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதற்கிடையில், அண்மையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய் ஆண்டனியின் 25வது படம் சக்தி திருமகன்.. எப்படி இருக்கும்? அவரே வெளியிட்ட தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com