மலையாள சேனலுக்குப் பேட்டியளித்த நடிகை ராதிகா, இந்தச் சம்பவங்களைச் சந்தித்ததாகவும், பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகவும், அதற்குப் பதிலாக எப்போதும் ஹோட்டல்களில் தங்குவதைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
மலையாள சேனலுக்குப் பேட்டியளித்த நடிகை ராதிகா, இந்தச் சம்பவங்களைச் சந்தித்ததாகவும், பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகவும், அதற்குப் பதிலாக எப்போதும் ஹோட்டல்களில் தங்குவதைத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
Published on: August 31, 2024 at 7:22 pm
Updated on: August 31, 2024 at 9:55 pm
Actress Radhika | நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் கேரள சினிமா துறையில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. முக்கிய நடிகர்கள் பலரும் இந்த குற்றச்சாட்டு உள்ளாகியுள்ளனர்.
பிரபலங்கள் மீதான இந்த பாலியல் குற்றங்களுக்கு கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் தெரிவின்றனர். இதுகுறித்து தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் சிபிஎம் எம்எல்ஏவான முகேஷ், ஜெயசூர்யா, புகழ் பெற்ற இயக்குனர் ரஞ்சித், சித்திக் போன்ற பல மலையாள நடிகர்களை அம்பலப்படுத்திய கேரள சினிமா துறையின் ஹேமா கமிட்டியின் சமீபத்திய அறிக்கையை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.
மலையான திரையுலகம் குறித்து பல மோசமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நடிகை ராதிகா, ஆண்கள் தங்கள் கேரவன்களில் கேமராக்களை பொருத்தி பெண்களின் நிர்வாண வீடியோக்களை பதிவு செய்யும் சம்பவங்கள் அதிகமாக இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை ராதிகா, இந்த வகையான சம்பவங்களை தனது அனுபவமாக கூறி, தாம் பாதுகாப்பற்ற நிலையை சந்தித்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்களில் கிடைக்கும் கேரவன்களுக்கு பதிலாக ஹோட்டல்களில் தங்குவதையே தான் எப்போதும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “நடிகைகளின் கேரவன்களுக்குள் ஆண்கள் கேமராக்கள் பொருத்தி, பெண்கள் உடை மாற்றும் கிளிப்பை சேமித்து வைத்திருப்பதையும், மொபைல் போனில் திரும்பத் திரும்பப் பார்ப்பதையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன்,”
திரையுலகம் சீராக இல்லை. ஆண் நடிகர்கள் யாரும் பெண் நடிகைகளை ஆதரிக்கவில்லை. இரவில் ஆண்கள் பெண்களின் கதவைத் தட்டுவது தொழிலாக உள்ளது. என்றார்.
இதையும் படிங்க தமிழ் திரையுலகிலும் அந்தப் பிரச்னை: மூத்த நடிகர்கள் சொல்வார்களா? லட்சுமி ராமகிருஷ்ணன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com