Actress Anushka Shetty : மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியை பணி செய்தவர் இன்று ஒரு படத்துக்கு ரூ.7 கோடி சம்பாதிக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? யார் இவர்?
Actress Anushka Shetty : மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியை பணி செய்தவர் இன்று ஒரு படத்துக்கு ரூ.7 கோடி சம்பாதிக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? யார் இவர்?
Published on: September 25, 2025 at 11:53 am
சென்னை, செப்.25, 2025: இந்திய சினிமாவில் நடிகைகள் பெரிய அளவில் புகழைப் பெறுவதும், காலப்போக்கில் முன்னணி வேடங்களைத் தக்கவைத்துக்கொள்வதும் எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
எனினும் இதில் சில நடிகைகள் சாதித்து ஆண் நடிகர்களைப் போல் சூப்பர் ஸ்டார்களாகத் தொடர்ந்து செழித்து வளர்கிறார்கள். எனினும், இதுபோன்ற நடிகைகளுக்கு பலமான கதாபாத்திர வாய்ப்புகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன. இந்நிலையில், ஒரு நடிகை தனது திறமை, ஆளுமை மற்றும் விடாமுயற்சி மூலம் துறையில் ஒரு வலுவான இருப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அவர் யார் எனத் தெரிகிறதா? அவர்தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் பள்ளி ஆசிரியையாக தனது வாழ்க்கையை தொடங்கினார் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து, தென்னிந்திய நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய், அல்லு அர்ஜூன், விஜய், நாகர்ஜூனா, ரவி தேஜா, ராணா டகுபதி, பிரபாஸ் என முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் 2006ஆம் ஆண்டு மாதவனின் ரெண்டு என்ற படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, விஜயின் வேட்டைக்காரன், சூர்யாவின் சிங்கம், விக்ரமின் தெய்வ திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அருந்ததி உள்ளிட்ட படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். இவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.7 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். இவரின் கேரியரில் பாகுபலி மிகப்பெரிய வெற்றிப் படமாக உள்ளது.
அனுஷ்கா ஆரம்ப காலகட்டத்தில் பெங்களூரு ஈஸ்ட்வுட் பள்ளியில் யோகா ஆசிரியையாக பணிபுரிந்தள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகின்றன.
இதையும் படிங்க : கல்கி 2 படத்தில் தீபிகா விலகல்.. பிரபாஸ் காரணமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com