Actor Vishal: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும் எனப் பதிலளித்தார் நடிகர் விஷால்.
Actor Vishal: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்கட்டும் எனப் பதிலளித்தார் நடிகர் விஷால்.
Published on: March 4, 2025 at 12:28 pm
சென்னை, மார்ச் 4, 2025: தமிழ் திரையுலகினரால் சின்ன தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஷால். இவர் சென்னையில் இன்று ( மார்ச் 4 2025) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த விஷால், ” நடிகர் விஜய் முதலில் ஊடகத்தினரை சந்திக்கட்டும்; அதன் பின்னர் பார்க்கலாம்” என்றார்.
தொடர்ந்து நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷால், ” சமூக சேவை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். இதில் விமர்சன பார்வை எதுவும் தேவையில்லை” என்றார்.
இதை எடுத்துச் செய்தியாளர் ஒருவர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் உங்களிடம் என்ன எதிர்பார்க்கலாம்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நடிகர் விஷால், கைகளை வானத்தை நோக்கி மேலே காட்டி, ” இறைவன் பார்த்துக் கொள்வான்” என செய்கை மூலம் பதில் அளித்து அங்கிருந்து நடையை கட்டினார்.
நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கட்சி தொடங்கி கடந்த வாரம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை பிரசாந்த் கிஷோர் திமுகவுக்கு அரசியல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தார். இந்த நிலையில் அவர் தற்போது தமிழக வெற்றி கழக பக்கம் திரும்பி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூட்டி உள்ளது.
இதையும் படிங்க என்ன சம்பவம் செஞ்சிங்க விஜய்? நடிகர் சரத்குமார் கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com