Actor Vikram shares about Bombay film | இயக்குனர் மணி ரத்தினத்தின் பம்பாய் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
Actor Vikram shares about Bombay film | இயக்குனர் மணி ரத்தினத்தின் பம்பாய் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
Published on: September 3, 2024 at 12:31 pm
Actor Vikram shares about Bombay film | சீயான் விக்ரம், ஆரம்ப காலக்கட்டத்தில் மணி ரத்தினத்தின் பம்பாய் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார் என்ற செய்தி அண்மையில் காட்டுத் தீப் போல் பரவியது.
சீயான் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான படம் தங்கலான். இந்தப் படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் பேசிய விக்ரம், “பாம்பாய் படத்தில் முதலில் நான்தான் நடிக்க இருந்தேன்; ஆனால் ஆடிசனில் செய்த சின்ன சொதப்பலால் தவறவிட்டுவிட்டேன்” என்றார்.
இதற்குப் பின்னால் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மணி ரத்தினம் கையில் கேமரா உடன் விக்ரமை நடிக்க கூறியுள்ளார். ஆனால் விக்ரம், மணி ரத்தினத்திடம் வீடியோ கேமரா இல்லையே எனக் குழம்பியுள்ளார்.
இந்தக் குழப்பத்தினால் ஆடிசனில் சொதப்ப விக்ரமிடம் இருந்து பம்பாய் படத்தின் வாய்ப்பு தவறிபோய் உள்ளது. அதன் பின்னர் விக்ரம் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். சில நேரங்களில் கண்ணீர் விட்டும் அழுதுள்ளார்.
மணிரத்தினத்தின் பம்பாய் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா ஜோடி இந்திய அளவில் பேசப்பட்டது.
பம்பாய் படத்துக்கு பின்னர் விக்ரம் மணி ரத்தினத்தின் இயக்கதில் ராவணன், பொன்னியின் செல்வம் பாகம் 1,2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்களின் மார்பகங்களை பார்த்தால் உணர்ச்சி வருமா? காதல் சரண்யா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com