GOAT Box office Report | நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் 5 நாளில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
February 6, 2025
GOAT Box office Report | நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் 5 நாளில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
Published on: September 10, 2024 at 1:00 pm
GOAT Box office Report | தளபதி விஜய்யின் கோட் (GOAT) படம் வெளியான ஐந்து நாட்களில் உலகம் முழுவதும் ரூ 300 கோடியை தாண்டியுள்ளது.
முதல் திங்கட்கிழமையில் சரிவைச் சந்தித்தாலும், சர்வதேச அளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் முன்னணி வகிக்கிறது.
அந்த வகையில், வெங்கட் பிரபு இயக்கிய தளபதி விஜய்யின் சமீபத்திய படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை பெற்றுள்ளது.
இந்த உளவு ஸ்பை திரில்லர் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் நான்காவது நாளில் உலகளவில் சுமார் 288 கோடி ரூபாய் வசூலித்தது. செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள், இந்தத் திரைப்படம் அதன் உள்நாட்டு நிகர வசூலில் ரூ.14 கோடியைச் சேர்த்தது.
திங்கட்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் அதன் மொத்த வசூல் ரூ.151 கோடியாகவும், உலகளவில் ரூ.300 கோடியைத் தாண்டியதாகவும் உள்ளது.
படம் உள்நாட்டில் அதன் முதல் நாளிலேயே ரூ.44 கோடி வசூல் செய்து வலுவான தொடக்கத்தைக் கண்டது. இருப்பினும், அதன் இரண்டாவது நாளில் ரூ.25.5 கோடிக்கு சரிவை சந்தித்தது.
இது 42.05 சதவீத சரிவு ஆகும். GOAT அதன் மூன்றாவது நாளில் ரூ 33.5 கோடி மற்றும் நான்காவது நாளில் ரூ 34 கோடியுடன் மீண்டும் எழுச்சி கண்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை படம் சிறிது தொய்வை கண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அதிக வரி செலுத்திய நட்சத்திரம்: சல்மான் கானை முந்திய விஜய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com