Actor Sarathkumar: சூர்ய வம்சம் படம் குறித்து பேசிய நடிகர் சரத் குமார், இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
Actor Sarathkumar: சூர்ய வம்சம் படம் குறித்து பேசிய நடிகர் சரத் குமார், இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
Published on: May 29, 2025 at 12:43 pm
சென்னை, மே 29 2025: நடிகர் சரத் குமார் இந்தியாகிளிட் யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சூர்ய வம்சம் படம் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது எங்கோ ஓர் ஈர்ப்பு சக்தி அந்தப் படத்துக்கு உண்டு என்றார். மேலும், அதிக ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்த படமும் அதுதான் என்றார்.
தொடர்ந்து பேசிய சரத் குமார், “ஒரு வீட்டில் படிக்காத பையனை அவரது தந்தை எப்படி பார்ப்பார்? என பலருக்கும் ஒரு கனெக்ட் ஆன படம் சூர்ய வம்சம். இந்தப் படத்துக்கு எங்கோ ஓர் ஈர்ப்பு சக்தி வந்துள்ளது. இந்தப் படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என நினைக்கவில்லை. மாட்டு வண்டி, பஸ், வேன் என மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தார்” என்றார்.
இதையும் படிங்க: தக் ஃலைப் படத்தில் சர்ச்சைக்குரிய முத்தம்; சிக்கியது யார் அபிராமி? திரிஷா?
விக்ரமன் இயக்கத்தில் நடிகர் சரத் குமார்- ராதிகா, தேவயாணி, மணிவண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்த படம் சூர்ய வம்சம். இந்தப் படத்தில் நடிகர் சரத் குமார் இரட்டை வேடங்களில் மாஸ் காட்டியிருப்பார். 1997ல் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சரத் குமார் பிலிம்பேர் விருதை வென்றார். மேலும் டைரக்டர் விக்ரமனுக்கும் சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது.
இவ்வாறு சூர்ய வம்சம் கிட்டத்தட்ட 6 விருதுகளை குவித்தது. மேலும், இந்தப் படம் பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்.. அடிக்கடி சந்திக்கும் பார்த்திபன்- வடிவேலு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com