Dhurandhar box office : நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
Dhurandhar box office : நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

Published on: December 4, 2025 at 10:23 am
மும்பை, டிச.4, 2025: நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் நாளை (டிச.5. 2025) தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஆதித்யா தார்- ரன்வீர் முதல் முறை கூட்டணியில் துரந்தர் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் படம் வசூலில் சாதிக்கும் என சினிமா வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸில் எப்படி?
துரந்தர் படத்திற்கான முன்பதிவு திங்கள்கிழமை (டிச.1, 2025) அன்று தொடங்கியது. சிறிது நேரத்திலேயே, படத்தின் முன்பதிவு மூலமாக வசூல் ₹1 கோடியைத் தாண்டியது. எனினும், அன் பிறகு, முன்பதிவு பெரிதளவில் இல்லை. தற்போதுவரை போராட்டமாகவே இருந்து வருகிறது. புதன்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, படம் வெளியாவதற்கு ஒன்றரை நாள் முன்பு, அதன் முதல் நாள் முன்பதிவு வசூல் ₹2.28 கோடியாக காணப்படுகிறது.
இதையும் படிங்க : வாரணாசி பட விழா.. கவனம் ஈர்த்த மகேஷ் பாபு மகள்!
நாடு முழுவதும் சுமார் 50,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த நிலையில் இன்று முன்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முன்பதிவு குறைவாகவே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வாரங்களுக்கு முன்பு வரை, துரந்தர் இந்த ஆண்டு ஒரு இந்தி படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்று, சாவா மற்றும் வார் 2 (இந்தி பதிப்பு) ஆகியவற்றைக் கூட மிஞ்சும் என்று பலர் கணித்து வந்தனர்.
இதற்கிடையில், துரந்தர் அதன் முதல் நாளில் இந்தியாவில் ₹18-20 கோடி நிகர வசூல் செய்யும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு இரண்டு பெரிய இந்தி பட ஓப்பனிங்களான சாயாரா (₹21.50 கோடி) மற்றும் சாவா (₹31 கோடி) ஆகியவற்றுடன் இந்தப் படம் ஒப்பிட முடியாது என்றும் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : ஒ.டி.டி தளத்தில் அக்ஷய் குமாரின், ஜாலி எல்.எல்.பி.. முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com