Aishwarya dhanush | தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைந்துவிடுவார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Aishwarya dhanush | தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைந்துவிடுவார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
Published on: September 15, 2024 at 11:52 pm
Aishwarya dhanush | சினிமா நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரஜினிகாந்த் உயிருடன் இருக்கும்வரை தனுஷ்-ஐஸ்வர்யாவை பிரிய விடமாட்டார்; இருவருக்கும் ஆதரவாக நிற்பார். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்கிறது” என்றார்.
தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்த நிலையிலும் இருவரும் நல்ல தாய்- தந்தையராக தொடர்ந்து வருகின்றனர். தனுஷூம் புதிய படங்களில் நடித்துவருகிறார். தனது மகனையும் சிறிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் அறிமுகப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், தனுஷ் தனது மகனை பாடலாசிரியராகவும் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் இன்ஸ்டாபக்கத்தில் லைக் ஒன்றையும் தனுஷ் போட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனால், இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. ரஜினிகாந்த் நிச்சயம் இருவரையும் சேர்த்து வைத்துவிடுவார். தனது மகளை விட்டு விடமாட்டார்” என்றார்.
இந்தப் பேச்சை ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கிவருகின்றர். அந்த வீடியோவில் பயல்வான் ரங்கநாதன் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி பிரிவு குறித்தும் பேசியுள்ளார்.
அப்போது, “தன்னிச்சையாக பிரிவை அறிவித்தால் அவ்வளவு எளிதில் விவாகரத்து கிடைக்காது. அதற்கு நடிகர் பிரசாந்த் வழக்கு ஒர் உதாரணம்” என்றார்.
இதையும் படிங்க : இந்திய சட்டங்கள் தெரியணுமா? ஆர்டர் ஆர்டர் நிகழ்ச்சி பாருங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com