Actor Ramar: ரோபோ சங்கர் தனக்கு 25 ஆண்டுகால நண்பர் என நகைச்சுவை நடிகர் ராமர் தெரிவித்துள்ளார்.
Actor Ramar: ரோபோ சங்கர் தனக்கு 25 ஆண்டுகால நண்பர் என நகைச்சுவை நடிகர் ராமர் தெரிவித்துள்ளார்.
Published on: September 19, 2025 at 2:10 pm
சென்னை, செப்.19, 2025: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்றிரவு (செப்.18,2025) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 46 வயதில் அவர் மரணம் அடைந்தது திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் ராமர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரோபோ சங்கரை எனக்கு 25 ஆண்டுகளாக தெரியும். அவர் எனக்கு சிறந்த நண்பர். அவரது இறப்பை ஏற்கவே முடியவில்லை. நாங்கள் கடந்த வாரம் கூட ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றோம். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். இப்படி ஓர் செய்தியை கேட்போம் என நாங்கள் நினைக்கவில்லை. அவர் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்” என்றார்.
மேலும், “நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் இறப்புக்கு பின்னர் இது எங்களுக்கு பெரிய இழப்பு என்றார். முன்னதாக, திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே எனக்கு ரோபோ சங்கரை தெரியும் என்றார்.
இதையும் படிங்க: ரோபோ சங்கர் மரணம்.. கமல்ஹாசன் உருக்கமான இரங்கல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com