FICCI Media Entertainment event: நடிகர் கமல்ஹாசன் உடன் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் எனக் கூறிய நடிகை திரிஷா அவர் ஒரு பாடசாலை அவரிடம் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
FICCI Media Entertainment event: நடிகர் கமல்ஹாசன் உடன் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் எனக் கூறிய நடிகை திரிஷா அவர் ஒரு பாடசாலை அவரிடம் நான் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
Published on: February 24, 2025 at 1:03 am
சென்னையில் பிக்கி ஊடக பொழுதுபோக்கு வணிக மாநாடு, 2025 பிப்ரவரி 22ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் நடந்தது. இந்த வணிக மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன், நடிகை திரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய நடிகை திரிஷா, “கமல்ஹாசன் ஓர் பாடசாலை” என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகை திரிஷா, ” கமல்ஹாசன் உடன் நான் தக்கலைப் என்ற படத்தில் நடித்து வருகிறேன். நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். இது எனக்கு மிகப்பெரிய ஓர் அனுபவமாக இருந்தது.
சுருங்கச் சொல்வதென்றால் நடிகர் கமல்ஹாசன் ஓர் பாடசாலை; அவருடன் நடிப்பதை நான் பள்ளிக்கு செல்வது போல் உணர்கிறேன். அந்த மிகப்பெரிய பாடசாலையில் நான் படித்து வருகிறேன்” என்றார்.
நடிகை திரிஷா பேசும்போது குறிப்பிட்ட கமல்ஹாசன், ” நானும் த்ரிஷாவுடன் பள்ளிக்குச் செல்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, ” சினிமா ஓர் ஆழ்கடல் என்று கூறிய கமல்ஹாசன், இங்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சினிமா மொழியை நன்கு கற்றுக் கொண்ட இயக்குனர்கள் நல்ல படங்களை தருகிறார்கள்.
எதிர்கால சினிமா இப்படி இருக்காது; புதிய புதிய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சினிமா நிறைய மாற்றங்களைச் சந்திக்கும்” என்றார்.
தொடர்ந்து சினிமாவில் மாணவனாகவே இருக்க விரும்புகிறேன் என கூறிய நடிகர் கமல்ஹாசன், திரிஷா என்ன? அவரின் மகளுடனும் நான் பள்ளிக்குப் போவேன்” என்றார்.
நடிகர் கமல்ஹாசனுடன் த்ரிஷா இதற்கு முன்பு தூங்கா நகரம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்து இருந்தது.
இந்த நிலையில் கமல்ஹாசன் உடன் தக்லைப் என்ற படத்தில் திரிஷா இணைந்து நடித்து வருகிறார். இந்த படம் இயக்குனர் மணிரத்தினம் கை வண்ணத்தில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ரம்யா ஆக திரிஷா.. ஏப்ரல் 10 கன்ஃபார்ம்.. அஜித்தின் புதிய பட ரிலீஸ் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com