கேன்ஸ் பட விழாவில் ஐஸ்வர்யா ராய் மகள் அறிமுகம்.. ரசிகர்கள் உற்சாகம்!

Aaradhya’s Cannes Debut : கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் மகள் முதல் முறையாக கலந்துகொண்டார்.

Published on: May 23, 2026 at 2:15 pm

நியூயார்க், மே 23, 2026: ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ அறிமுகமானார். அமிதாப் பச்சன் குடும்பத்தின் இளைய உறுப்பினரான ஆராத்யா பச்சன், தாயார் ஐஸ்வர்யா ராய் உடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்தார். இது, ஆராத்யாவின் முதல் சர்வதேச ரெட் கார்பெட் தோற்றம் ஆகும். இந்த விழாவில், உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது மகளுடன் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டார். இருவரும் அழகான உடை அலங்காரத்தில் தோன்றி, புகைப்படக் கலைஞர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

ரசிகர்கள் எதிர்வினை

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், “வாவ்!” எனக் குரல்கொடுத்து, ஆராத்யாவின் அறிமுகத்தை பெரும் வரவேற்புடன் கொண்டாடினர். அதில், “அமிதாப் பச்சன் குடும்பத்தின் புதிய தலைமுறை” என ரசிகர்கள் பெருமைப்பட்டனர்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் சினிமா மரபை தொடர்ந்து, ஆராத்யா தனது முதல் அடியை சினிமாவில் கேன்ஸ் படவிழாவில் வைத்துள்ளார். இது, பச்சன் குடும்பத்தின் சர்வதேச புகழை மேலும் உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காஜல் அகர்வாலின் “தி இந்தியா ஸ்டோரி.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com