Top 5 tax-saving ELSS funds: 2026ல் டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் வரிசேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
Top 5 tax-saving ELSS funds: 2026ல் டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் வரிசேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: February 7, 2026 at 9:25 pm
சென்னை, பிப்.7, 2026: 2026 ஆம் ஆண்டிலும் கூட, பழைய வரி ஆட்சியின் கீழ் ஈக்விட்டி திட்டத்துடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து பொருத்தமானதாகவே காணப்படுகின்றன. இந்த நிலையில், 2026 சிறந்த இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1) பேங்க் ஆ.ஃப் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம்
பேங்க் ஆஃப் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நிதி நேரடித் திட்டம் 1 வருட வருமானம் 8.70% ஆகும். மேலும், 3 வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்18.66% ஆகவும், 5 வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 17.41% ஆகவும், 10 வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 18.04% ஆகவும் காணப்படுகின்றது.
மேலும், இந்த நிதி கடந்த 7 வருட காலத்தில், 20.41% வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் லாக்-இன் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
2) டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம்
டி.எஸ்.பி இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம் கடந்த ஓராண்டில் 13.49% வளர்ச்சியும், 3, 5 மற்றும் 10 ஆண்டுகள் முறையை 21.49 சதவீதம், 18.81 சதவீதம், 18.28 சதவீதம் வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். திட்டத்தின் லாக்-இன் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
3) மிரே அசெட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம்
மிரே அசெட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம் கடந்த ஓராண்டில் 13.99 சதவீதம் வருவாய் அளித்துள்ளது. அதுவே 3 ஆண்டுகளில் 18.82 சதவீதமும், 5 ஆண்டுகளில் 16.39 சதவீதமும், 10 ஆண்டுகளில் 19.82 சதவீதமும், 7 ஆண்டுகளில் 18.60 சதவீதமும் வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித வளர்ச்சி கண்டுள்ளது.
இத்திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்; திட்டத்தின் லாக்-இன் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
4) மோதிலால் ஓஸ்வால் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம்
மோதிலால் ஓஸ்வால் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம் கடந்த ஓராண்டில் 5.39% வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரம் 3 ஆண்டில் 23.71, 5 ஆண்டில் 19.29 மற்றும் 10 ஆண்டில் 18.47 சதவீதமும், வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித வளர்ச்சி கண்டுள்ளது.
இத்திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம்; திட்டத்தின் லாக்-இன் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
5) குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம்
குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு நேரடித் திட்டம் கடந்த ஓராண்டில் 12.14 சதவீதம் வருவாய் அளித்துள்ளது. அதேநேரம், 3 ஆண்டுகளில் 18.51 சதவீதம், 5 ஆண்டுகளில் 21.76 சதவீதம், 10 ஆண்டுகளில் 21.51 சதவீதம், 7 ஆண்டுகளில் 24.13 சதவீதம் வருட கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித வளர்ச்சி கண்டுள்ளது.
Note: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டு முன், முதலீடு தொடர்பான ஆவணங்களை முழுமையாக படிக்கவும்.
இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்குமா தங்கம், வெள்ளி? சர்வதேச பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com